Posts

Showing posts from December, 2013

Uttamarseeli Sri Venugopalaswamy Temple

Image
Uttamarseeli is a small village  located 13kms from Srirangam on the way to Kallanai ( Grand Anicut) in Tiruchirappalli district.  Daily town bus facility is available on regular intervals from Tiruvanaikoil bus stop to Kallanai. Uttamarseeli is only a few bus stops ahead of Kallanai Dam. Srirangam is known for being the island surrounded by Cauvery and Kollidam rivers - Cauvery splits into cauvery and kollidam tributaries to surround Sri Ranganathar as a garland and then rejoins into one Cauvery river again further east. Uttamarseeli is also situated in this same piece of island.  In the serene village of Uttamarseeli, surrounded by paddy fields, is a temple for Sri Venugopala Swamy. I am not aware who built this temple. But the temple has been there even before my grandfather's time period, more than 150 years ago. This temple has been our native deity (kula deivam). The main moorthy of the temple is Sridevi Boodevi samedha (on either side) Sri Venugopalan playing a fl

ஆனந்தபைரவியில் அனந்தா

Ragam: AnandaBairavi     Thalam:Adi பல்லவி வேங்குழல் ஊதிடும் வேணுகோபாலா பக்தர்கள் போற்றிடும் பரமதயாளா அனு பல்லவி ஆனந்தபைரவியில் பாடி மகிழ்ந்தேன் (உன்னை) ஆனந்த ரூபனே ஆதி நாராயணா சரணம் கறவைகள் மேய்த்திடும் கோவிந்தா எங்கள் குறைகளை தீர்த்திடும் கருணாகரா அரவிந்த நாயகியின் மணவாளா உன் புகழ் பாடினோம் தாமோதரா  கண்ணா

கண்ணனை சுருட்டி

Ragam: Surutti    Thalam: Adi பல்லவி கண்ணணுக்கே படைத்தோம் இசையமுது - மாயக் கள்வனே தான் எங்கள் கனியமுது அனு பல்லவி கார்முகில் வண்ணனாய் கோலம் கொண்டாய் அந்த கல்லணை அருகில் கோயில் கொண்டாய் சரணம் சிறுவனாய் வெண்ணையை திருடி தின்றாய் - கோ பாலனாய் கோபியர் லீலை செய்தாய் மாதவனே மதுசூதனனே எங்கள் தெய்வமாய் வேங்குழல் ஊதி நின்றாய்

நீலாம்பரியில் நீலமேகன்

Ragam: Nilambari    Thalam: Adi பல்லவி வேணு கோபாலா  கிருஷ்ணா முராரி நவநீத சோரா கிருஷ்ணா கிரிதாரி அனு பல்லவி உத்தமர்சீலியில் ஓய்யாரமாகவே கானமழை பொழிகின்றாய் கிருஷ்ணா சரணம் புல் தின்னும் மாடுகள் மேய்ந்திடும் மத்தியில் புல்லாங்குழல் கொண்ட தேவாதி தேவா கல்லுருவாய் நின்ற கருணைக்கடலே கலியுக கடவுளே கருமணியே கிருஷ்ணா

Nursery rhymes in Tamil

The first rhymes I composed for my daughter three years ago.  மாதவா  கேசவா ராகவா வா வா அச்சுதா அனந்தா முத்தம்  தா தா தா ஸ்ரீதரா ஸ்ரீகரா தாமோதரா ரா ரா லா ல லா விட்டலா லா ல லா ல லா ல லா ராதிகா கோபிகா க்ஷீதிகா  ககக ராதை கோதை சீதை தித்தித்தை பைஷ்மிகி ஜானகி ரெங்க நாயகி  கிகிகி ருக்மிணி மைதிலி வைதேஹி ஹி ஹி ஹி

மாறன் சடகோபன்

குருகூரில் பிறந்தவனே (திரு) குரு பரம்பரையில் உயர்ந்தவனே நாரணன்  நாமம் நாட்டியவனே நான்மறை தமிழில் தந்தவனே வைகாசி விசாகத்தில் உதித்தவனே வைணவம் தழைய வாழ்ந்தவனே   மதுரகவியை ஈர்த்தவனே மதுசூதன் விஷயம் உரைத்தவனே மாதவன் புகழ் பாடியவனே - இவணை மாறன் என்று அறிவோமே

காம்பூதும் கண்ணணை காம்போதியில் பாடினேன்

Presenting my first full kriti composition in Ragam Kamboji, dedicating to our family's native deity Sri Venugopala Swamy in Uttamarseeli village.  பல்லவி  குல தெய்வமே உன்னை கொண்டாடினேன் குழல் ஊதும் கண்ணனாய் உத்தமர்சீ லியில் கோயில் கொண்ட  அனு பல்லவி அரவிந்த நாயகியாம் தாயார் சந்நிதியில்  எழுந்து அருள் புரிகின்றாளாம்   சரணம் சிறிய வீதியும் உண்டு ஊரில் வயல்கள் சூழ்ந்திட மாடுகள் மேய்ந்திட காவிரி நதி பாய துளசி வனம் நடுவில் வேங்குழல் ஊதுவான் வேணுகோபால தாசன் பாட