ஆனந்தபைரவியில் அனந்தா

Ragam: AnandaBairavi     Thalam:Adi

பல்லவி

வேங்குழல் ஊதிடும் வேணுகோபாலா
பக்தர்கள் போற்றிடும் பரமதயாளா


அனு பல்லவி

ஆனந்தபைரவியில் பாடி மகிழ்ந்தேன் (உன்னை)
ஆனந்த ரூபனே ஆதி நாராயணா


சரணம்

கறவைகள் மேய்த்திடும் கோவிந்தா எங்கள்
குறைகளை தீர்த்திடும் கருணாகரா
அரவிந்த நாயகியின் மணவாளா
உன் புகழ் பாடினோம் தாமோதரா  கண்ணா

Comments

Popular posts from this blog

நாதனும் நாதமும்

Aruna Sairam strikes again

Salem Sriram sticks to Sampradaya